41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜூன் 14, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் வெளியிட்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் பாராட்டுக் கடிதம்
மரணத்தை விளைவிக்கும் காவல் சித்திரவதை, காவல் வன்முறை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழும் போதெல்லாம் மக்கள் கண்காணிப்பகம் பெரிதும் கவலை கொண்டது. இந்நிகழ்வுகள் மனிதநேயம் மிக்க காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குடிமக்களின் மனசாட்சியை வெகுவாக உலுக்கியது.
தேனி ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த புகாரை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு ரிசாத் ராஜிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர், நீதிபதி ஜெயச்சந்திரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.