for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித  உரிமைகள் ஆணையம், அந்த புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை .தாக்கல் செய்தார்.

Full Media Report


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு - அரசு பரிசீலிக்க உயர் நீதி மன்றம் அறிவுரை 

Full Media Report


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது  விழுந்த வடு சென்னை உயர்நீதிமன்றம் 

Full Media Report


சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்தது.

Full Media Report


சென்னை: மலையக-தாயகம் திரும்பியோருக்கான இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் கந்தையா, மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன், என்சிஎச்ஆர்ஓ தேசிய தலைவர் பேராசிரியர் மார்க்ஸ், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழந்தைசாமி, இளம்பரிதி, இளந்தமிழகம் மற்றும் மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த பிரநிதிகள் செந்தில் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.

Full Media Report


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் எனக்கோரி போராடிய மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தது. இது தொடர்பாக விசாரித்த மனித உரிமை ஆணையம், வழக்கை முடித்துவைத்திருந்தது. அதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் 'விசாரணையை மனித உரிமை ஆணையம் மீண்டும் தொடங்க வேண்டும். முறையாக விசாரணை நடக்கிறதா என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். 

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று சென்னை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமை ஆணையம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. 

Full Media Report


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதமும் பலியானோரின் புகைப்படங்களும்வெளியாகி நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?' என்ற கேள்விகளும் எழுந்தன.

Full Media Report


Without meaning disrespect, yes, the protest may not have been legal or legitimate, but citizens cannot be fired on the behalf of any corporate body," the Chief Justice added.

Full Media Report



Join us for our cause