அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் விசாரணைக்காக வந்தவர்களிடம் வார்த்தையில் கூற முடியாத அளவுக்கு கொடூர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்தி வெளியானதும் மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். அதோடு, சார்ஆட்சியர் விசாரணை நடத்தியதும் ஏற்புடையதல்ல. காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் செயல்படுவதை ஆட்சியர் கண்காணிப்பது அவசியமானது. அதிலும் திருநெல்வேலி ஆட்சியர் கவனம் செலுத்தவில்லை.