அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வழக்கில் சேர்த்து மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட போலீசார், கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளை, வழக்கில் இணைத்து, கூடுதல் மனுவை ஹென்றி திபேன் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். இராமன் ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார்.