திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்துக்கு மானாமதுரை டி.எஸ்.பி. பொறுப்பேற்க வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18-க்கு பேட்டியளித்த அவர், இதை விட கொடூரமான சித்ரவதை மரணத்தை தான் பார்த்ததில்லை எனக் கூறினார்.
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற நாளின் காவல் நிலைய சி.சிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை அறிக்கையை வழங்கக் கோரிய மனுவில், விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.