மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கில், டிச.31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, சோலையழகுபுரத்தை ச் சோ்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக, அவனியாபுரம் போலீஸாா் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அதன்பின்னா் பாலமுருகன் உயிரிழந்துள்ளாா். போலீஸாா் அடித்துத் துன்புறுத்தியதால் அவா் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்து கருப்பன் உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துத் கருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றளாா்
போலீஸாா் அச்சுச் றுத்தல் காரணமாக முத்துத் கருப்பன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக வழக்குரைஞா் ஹென்றிடிபேன், உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதினாா். அதனடிப்படையில், பாலமுருகன் மா்ம மரணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளா் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே வழக்கு விசாரணையை உயா்நீயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணாஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குத் தொடா்பாக டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.