சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம், பள்ளிகளில் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.
குறிப்பாக கோயம்புத்தூர், வேலூர், பழனி உள்ளிட்ட மாவட்டங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கைது நடவடிக்கை நடந்துவருகிறது. இந்நிலையில் பழனியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் (POCSO act) கைதுசெய்யப்பட்டுள்ளார். இப்படி பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், இதற்கு காரணம் என்ன என்று தேடத் தொடங்கினோம்.
இது குறித்து மக்கள் கண்காணிப்பு அமைப்பின் நிறுவனர் ஹென்றி டிபேன் தெரிவித்ததாவது, "பள்ளியில் வன்முறை, குடும்பத்தில் வன்முறை, தெருக்களில் வன்முறை இது புதிய அரசு வந்ததால் அதிகரித்துள்ளது என்று சொல்லவில்லை. பள்ளிகளில் உள்ள சிறார்களுக்கு ஆசிரியர்களால் வன்முறை என்பது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.
தற்போது இது குறித்து வெளிவருவதற்கு வாய்ப்பு அளித்துள்ளது. அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான வன்முறை எப்போதும் இருந்துவந்தது. தற்போது குழந்தைகளின் பெற்றோர்கள் இதனை வெளி உலகத்திற்கு கொண்டுவந்துள்ளனர். தேசிய குழந்தைகள் ஆணையம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆய்வு நடத்தும்போது பள்ளிகளில் குழந்தைகளுக்கான வன்முறைகள் குறித்து கண்டறியப்பட்டன.
............................................