மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விழிப்பு உணர்வு நடைப்பயணத்தை மதுரையிலிருந்து கடந்த 31-ம் தேதி தொடங்கினார். செக்காணூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக நீண்ட நடைப்பயணத்தின் நான்காவது நாளான இன்று தேனியை வந்தடைந்தார் வைகோ. பங்களாமேட்டில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக 7.25 மணிக்கு பொதுக்கூட்ட மேடையை அடைந்த வைகோ, `மத்திய அரசு கொண்டுவரும் நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை நாம் முழுவதுமாக எதிர்க்க வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்னைக்குப் போராட வந்தது போல, வீட்டுக்கு ஒருவர் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகப் போராட வர வேண்டும். பத்து லட்சம் பேர் திரள வேண்டும்" என்று பேசினார்.