அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி!
Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது.
.............................................
மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பொதுந வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பு அஜித்குமாரின் உடலை முழுமையாக பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்தார். நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா என்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்றும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் ஹென்றி திபேன் வாதிட்டார்.
...........................................................
