அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் இளைஞர் அஜித்குமார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார். மேலும், காவல்துறையினர் அடித்த வீடியோ நீதிபதிகளிடம் போட்டு காண்பிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைப் இரும்பு ராடுகளைக் கொண்டு தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி தாக்கல் செய்தார்.
....................................................
