திருப்பரங்குன்றத்தில் திருமாவளவளவன்.. திடீர் விசிட்டிற்கு காரணம் என்ன?
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்துடன் நான் பங்கேற்கிறேன் - திருமாவளவன்.
மதவாத சக்திகள் இந்த பிரச்னையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
..................................................................................................
மனித சங்கிலி போராட்டம்
முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். ஆனால் நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில். இந்த அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், இந்து சமூகத்தை சார்ந்த பிரதிநிதி தமிழன் திமுக கவுன்சிலர் இருக்கிறார். சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். தங்கள் இடையில் இருந்த பகை இல்லை என்பதை தெளிவு படுத்தினார்கள். ஆகவே மதவாத சக்திகள் இந்த பிரச்னையை பெரிதாக்க கூடாது. தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது. என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்துடன் நான் பங்கேற்கிறேன்” எனக் கூறினார்.
