இந்து மக்கள் மாட்டுக் கறியை உண்ணுகிறார்கள் - திருமாவளவன் பேச்சு!
நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வின் அடிப்படையில் சுதந்திர போரில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம், ஆனால் இங்கே பாஜக கிறிஸ்தவர், இஸ்லாம் என பிரித்தலும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க பார்க்கிறார்கள் என மதநல்லிணக்க மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.
மத நல்லிணக்க மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு
ஒவ்வொருக்கு அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு, அந்த நம்பிக்கையில் நாம் தலையிடவில்லை, அதனை பின்பற்றினால் மதநல்லிணக்கம் துளிர்க்கும் அதை புரிந்து கொள்ளத்தான் இந்த மாநாடு, நாம் இந்து சமூகத்தை விமர்ச்சிக்கிறோம், கூறுகிறார்கள், இந்து மத நம்பிக்கை வேறு, இந்து மத நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு, மதக் குரு மார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். மதத்தை கையில் எழுத்து மதத்திற்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்சனை எழுகிறது. இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள வேண்டியது இந்து மதப்பற்றாளர்கள், குருக்கள், மத சார்ந்தவர்கள்தான், சங்கராசாரியார்கள் பாஜகவை கண்டிக்காமல் இருக்கிறார்கள்.
