வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்று கொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிவித்தார். விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
ஆணையம் தரப்பில், புதிதாக ஏதும் ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என உத்தரவிடபட்டுள்ளதாகவும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் வாதிடப்பட்டது.
பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அறிக்கை கிடைத்திருந்தால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.