முதல்வர் மூச்சுவிடாதது ஏன்?
மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் (பீப்பிள்ஸ் வாட்ச்) அலுவலகத்தில் விசாரணை நடத்திய சிபிஐ, அந்த அமைப்பின் இயக்குநர் ஹென்றி டிஃபேன் உள்ளிட்டோர் மீது கூட்டுச்சதி மற்றும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவும் செய்திருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய கல்விக்கொள்கை, பீமா கோரேகான் சதி வழக்கு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவைக்கு எதிராக ’பீப்பிள்ஸ் வாட்ச்’ தீவிரமாக களத்தில் நின்றதுதான் இதன் பின்னணி என்கிறார்கள். இதைக் கண்டித்து திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்வினையாற்றி இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதைக் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்களாம். கனிமொழி மூலமாகவும் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாம். ஆனால், இந்த விவகாரத்தில் மூச்சுவிடவில்லை முதல்வர். எதிர்க்கட்சியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாம், ஆளும் கட்சியாக இருந்தால் அளந்துதான் பேசவேண்டும் என அவருக்குத் தெரியாதா என்ன!