கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று கடந்த ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலில் காணாமல்போனார்கள். இப்புயலின் பாதிப்பின் மூலம் இந்தியாவில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளின் தோல்வியை சுட்டிக்காட்டுகிறது
தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 'மக்கள் பொது விசாரணை' டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில்மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கொல்சே பாட்டில் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. பொது விசாரணை குழுவானது நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துரை, தூத்துர், தேங்காய்பட்டினம், குளச்சல், முட்டம், கூரைவிளை, கல்படி, உன்னான்குளம் மற்றும் பாம்பன்விளையில் காணாமல்போன மீனவர்களின் குடுத்தும்கள், தப்பி மீண்டு வந்த மீவார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட மற்றும் மாநில அரசு அதிகாரிகளை சந்தித்தது. பாதிக்கப்பட்ட பொது விசாரணை குழுவினரினிடம் கொடுத்த வாக்குமூலங்களின்படி ஒக்கி புயலின் பொது அபாயகால எச்சரிக்கை மற்றும் தகவல்கள் மக்களிடம் குறிப்பாக மீனவர்களிடம் சரியாக கொண்டுசேர்க்கப்படாததன் காரணத்தால் பாதிப்புகள் அதிகமானதை இக்குழு கண்டறிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று கடந்த ஒக்கி புயலால் நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடலில் காணாமல்போனார்கள். இப்புயலின் பாதிப்பின் மூலம் இந்தியாவில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளின் தோல்வியை சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சில மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 'மக்கள் பொது விசாரணை' டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில்மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் கொல்சே பாட்டில் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. பொது விசாரணை குழுவானது நீரோடி, மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துரை, தூத்துர், தேங்காய்பட்டினம், குளச்சல், முட்டம், கூரைவிளை, கல்படி, உன்னான்குளம் மற்றும் பாம்பன்விளையில் காணாமல்போன மீனவர்களின் குடுத்தும்கள், தப்பி மீண்டு வந்த மீவார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட மற்றும் மாநில அரசு அதிகாரிகளை சந்தித்தது. பாதிக்கப்பட்ட பொது விசாரணை குழுவினரினிடம் கொடுத்த வாக்குமூலங்களின்படி ஒக்கி புயலின் பொது அபாயகால எச்சரிக்கை மற்றும் தகவல்கள் மக்களிடம் குறிப்பாக மீனவர்களிடம் சரியாக கொண்டுசேர்க்கப்படாததன் காரணத்தால் பாதிப்புகள் அதிகமானதை இக்குழு கண்டறிந்தது
'புயல் சார்ந்த இனஒதுக்கல்' பல்வேறு சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கை. இவ்வறிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் போக்கி புயலின் போது ஏற்பட்ட சேத அளவீடுகள் மற்றும் கண்டறிந்த உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் ஒப்படைக்கப்படும்.
'புயல் சார்ந்த இனஒதுக்கல்' பல்வேறு சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கை. இவ்வறிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் போக்கி புயலின் போது ஏற்பட்ட சேத அளவீடுகள் மற்றும் கண்டறிந்த உண்மைகள் மற்றும் பரிந்துரைகள் ஒப்படைக்கப்படும்.