Media

You have issued a statement dated 04.04.2023 titled Media trial regarding an allegation of Custodial Violence against Mr. Balveer Singh, IPS, due to public interest. You addressed the statement to “Dear All” without specifying any name. So, we have...

வழக்குரைஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புகார் அளித்துள்ள அருண்குமார் வெளியூரில் வசித்து வருவதால், விசாரணைக்கு வர இயலவில்லை. நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் எதுவும் அளிக்கவில்லை. தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரியை வழக்கின் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அப்போதுதான் இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடைபெறும். நாங்கள் அச்சமின்றி சாட்சி சொல்ல வர முடியும். அதன்பின்னரே நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் அளிப்போம் என எழுத்துப் பூர்வமாக மனு அளித்துள்ளோம் என்றார்.

Mr.Henri Tiphagne, executive director of People’s Watch, had raised a few questions in his open letter to the IPS Officers’ Association-Tamil Nadu Chapter president Mr.Abhash Kumar -on 6th May 2023. “You have issued a statement dated 04.04.2023 titled Media...



இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்திற்கு, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், ஹென்றி திபேன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.



அருண்குமாரின் வழக்கறிஞர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டிக் கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “பல்வீர்சிங் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. குற்றம் சாட்டியவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதிக்கப்பட்டவர் இப்போது பெங்களூரில் இருக்கிறார். அவர் 5-ம் தேதி ஆஜராக 3-ம் தேதி சம்மன் அனுப்புகின்றனர். ஐபிஎஸ் அதிகாரி மேல் நடக்கும் குற்றச்சாட்டு குறித்து ஐ.ஜி, அல்லது டிஐஜி நிலை அதிகாரியே விசாரிக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் காவலர்கள் கைது செய்யப்பட்ட பின்பே உண்மைநிலை வெளிவந்தது. அதேபோலத்தான் இதிலும் பல்வீர் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் ”என்றார்.
