Media

புதுகோட்டை மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 118 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். 18ஆம் தேதி அதிகாலை மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், ஜோசப் ஆகியோர் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களின் படகு நோக்கி வேகமாக வந்த இலங்கை கடற்படை கப்பல், மீனவர்களின் படகில் மோதி மூழ்கடித்தது. படகிலிருந்த மீனவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை மீட்டு கைது செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் ராஜ்கிரண் நிலை என்னவானது என்றே தெரியாமல் போக, அன்று மாலை ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு, சிலமணி நேரத்தில் அந்த தகவலைத் திரும்பப் பெற்றதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதையடுத்து கடந்த 1.10.2021 அன்று ராஜ்கிரணின் உடல் மீட்கப்பட்டதாகப் படங்கள் வெளியானது. இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலையும், கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவர் ராஜ்கிரணின் உடல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெறக் கோட்டைப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள், இரண்டு அதிகாரிகளுடன் சர்வதேச எல்லைக்குச் சென்ற இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் மீனவர் ராஜ்கிரணின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Raj Kiran’s body was recovered and a postmortem conducted at Jaffna Medical College Hospital in Sri Lanka. Later, the body was handed over to the Indian authorities The Madurai Bench of the Madras High Court has ordered a...

A letter to the CJI stresses that some of these matters, pending for as long as two years, affect several people's lives and livelihoods acutely. The Wire Staff...



“The instant transfer would quell any such efforts to strengthen the judiciary in the State... We request that the collegium may reconsider, in public interest, its decision,” the representation, signed by over 200 lawyers, said Over 200 lawyers...


இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக தமிழக அரசு சார்பில் நினைவு சதுக்கம் அமைக்க வேண்டும்.பாம்பன் தீவுக்கவி அருளானந்தம் நினைவுக்கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் வலியுறுத்தல். நெய்தல் நிலத்தின் பெருந்தலைவரும், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு நட்புறவு பாலமாக விளங்கிய தீவுக்கவி யு.அருளானந்தம் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இராமேஸ்வரம் – பாம்பன் பெரியநாயகி மகாலில் நவம்பர் 5 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மீனவர் சங்க தலைவர்கள், மக்கள் இயக்க தலைவர்கள் பங்கு கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர். “நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் நீவுக்கவி யு.அருளானந்தம் “என்ற நூலும், “நெய்தல் நதி தீவுக்கவி யு.அருளானந்தம்’ என்ற நூலும் இக்கூட்டத்தில் அவரது நினைவாக வெளியிடப்பட்டது. நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் தீவுக்கவி யு.அருளானந்தம் என்ற நூலை தேசிய மீனவர் பேரவைத் தலைவர் திரு.இளங்கோ, அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் திரு.ஆன்றன் கோமஸ், மக்கள் கண்காணிப்பகம் தலைவர்.வழக்கறிஞர்.கென்றி திபேன் ஆகியோர் கூட்டாக வெளியிட நூலை மறைந்த அருளானந்தம் அவர்களின் சகோதரர் யு.இருதையம் அவர்கள் பெற்றுக் கொண்டார். மீனவர் உரிமைக்கூட்டமைப்பு, பாம்பன் பரவர் நலப் பேரவை, சமம் குடிமக்கள் இயக்கம் மற்றும் அனைத்து மீனவர் சங்கங்கள் இணைந்து நடத்திய புகழ் அஞ்சலி கூடுகையை மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வழக்கறிஞர் சமம்.சி.சே.ராஜன் அவர்கள் ஒருங்கிணைத்தார். ஒருங்கிணைப்புக் குழுவில் பாம்பன்.கேவிஸ்டன், ஜே.அருளானந்தம், கனிஷ்டன், முடியப்பன், லிடிஸ், ரோவன் தல்மேதா போன்றோர் செயல்பட்டனர். மறைந்த அருளானந்தம் அவர்களின் உருவப்படத்திற்கு பாம்பன் பரவர்நலப்பேரவை தலைவர் திரு.எஸ்.ஏ. பவுல் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து மீனவர் சங்க தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத்தலைவர் சேசுராஜ், எஸ்.பி.ராயப்பன்,பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், மூக்கையூர் ஜான், இருதைய மேரி, ராக்கினி, மகத்துவம், சைமன், ஜெரோம், வழக்கறிஞர் ஜான்சன், மற்றும் எழுத்தாளர். குறும்பனை பெர்லின், பேரா.அந்தோனி ராஜ், அருட்தந்தை சர்சில், அருட்தந்தை பிரிட்டோ, ஹென்றிடிபேன், ஆண்டன் கோமஸ், இளங்கோ என பல்வேறு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். நவம்பர் 21 அகில உலக மீனவர் தினத்தனற்று தமிழகம் முழுவதும் தீவுக்கவி அவர்களை நினைவுக்கூறுவது என்றும்; மறைந்த தீவுக்கவி. அருளானந்தம் அவர்கள் எழுதி வெளி வராமல் இருக்கும் மீனவர் வரலாறு குறித்த நூலை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை கொண்டு வெளியிடுவது என்றும்; திரு.அருளானந்தம் அவர்கள் பெயரில் பாம்பனில் நூலகம் துவங்கப்பட வேண்டும் என்றும்; இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும்,மீனவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்துவது என்றும்; இலங்கை கடற்படையால் உயிரிழந்த அனைத்து மீனவர்களின் நினைவாக நினைவுசதுக்கம் தங்கச்சி மடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது மீனவர் உரிமைக்கூட்டமைப்பு சார்பில் ரோவன் தலாமேதா நன்றிக் கூறினார்.


இலங்கை கடற்படையினர் தனது கணவர் ராஜ்கிரணை அடித்தோ அல்லது சுட்டுக்கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மனு அளித்தார் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின சேர்ந்த இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது மனைவி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில கடலில் விழுந்து மூழ்கி இறந்த மீனவர் ராஜ்கிரன் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுததிஅவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்பாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு மூழ்கியது. இதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் மற்ற இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர் இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் இறந்த மீனவர் ராஜ்கிரன் உடல் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டது அதற்கு முன்னதாக இலங்கையில் அவரது உடல் பிரத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் இலங்கை கடற்படையினர் தமிழக கடற்படையிடம் அவரது உடலை ஒப்படைத்தனர். கோட்டைப்பட்டினத்துக்கு, ராஜ்கிரண் உடல் வந்தவுடன், அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இறந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது.அதன் பின்னர் இறந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம் செய்யப்பட்டது, இந்நிலையில் ராஜ்கிரன் மனைவி பிருந்தா மற்றும் அவரது உறவினர்கள் இன்று புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில், தனது கணவர் ராஜ்கிரணை அடித்தோ அல்லது சுட்டுக்கொன்று விட்டதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அடக்கம் செய்யும்போது கணவர் உடலை தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், மீண்டும் அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் குழு முன்னிலையில் நடத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசு சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து இலங்கை கடற்படையினரை குற்றவாளியாக சேர்த்து கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.