People's Watch in Media

மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேனும் சிறப்பு விசாரணை அதிகாரியிடம் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக, அவர் திரட்டிய தகவல்களை விசாரணை அதிகாரியிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்ரவதை செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ், நெல்லை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Henry Tiphagne, the executive director of the Human rights organisation People’s Watch, demanded Singh’s arrest and that sections under the Scheduled Caste and Scheduled Tribes Act and Juvenile Justice Act should be added to the FIR, according to The New...

மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் அம்பை தாலுகா அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதாவை நேரில் சந்தித்து பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை தகவல்களை அபிடவிட்டாக தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்களுடன் சென்று அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர்கள் அம்பை காவல்நிலையத்திற்கு சென்றனர். அங்கு பல் பிடுங்கப்பட்ட சம்பவம் நடந்த அறைகளை காட்டி சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் விளக்கினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு @News18Tamilnadu

பல் பிடுங்கிய விவகாரம் அம்பாசமுத்திரம் காவல்துறையினருக்கு அனுமதி மறுப்பு @PuthiyaThalaimuraiTV

பல் பிடுங்கப்பட்ட விவகாரம் | ஏஎஸ்பி மீது பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!ஹென்றி திபேன் வைத்த கோரிக்கை @oneindiatamil7945

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு @PuthiyaThalaimuraiTV

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு @JayaPlusNews

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு @NewsTamil24X7TV

மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி திபேன் செய்தியாளர் சந்திப்பு | அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு