for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் : "விசாரணையை டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை People's Watch in Media Madurai

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் குறித்த விசாரணையை முடித்து, வரும் 31-ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் பாலமுருகன் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன்...

#ThanthiTV, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #CustodialDeath, #PoliceTorture
22 Dec 2021 மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை மக்கள் கண்காணிப்பகம் மகிழ்வுடன் வரவேற்கிறது. காவல் துறையின் பணி வன்முறையற்றதாக இருக்கக் கோருகிறது. People's Watch in Media Madurai

பத்திரிகைச் செய்தி மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை மக்கள் கண்காணிப்பகம்  மகிழ்வுடன் வரவேற்கிறது. காவல் துறையின் பணி வன்முறையற்றதாக இருக்கக் கோருகிறது. காவல் வன்முறையால் பாதிப்புற்ற பழங்குடி இருளர் சமூகப் பெண்களின்  வழக்குமூலங்களை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம்  21.12.2021 அன்று அளித்துள்ள உத்தரவை, மக்கள் கண்காணிப்பகம் வரவேற்றுப்  பாராட்டுகிறது. கடலூர் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சீனிவாசன், மற்றும் நான்கு காவலர்கள் மீது பாதிப்புற்ற பழங்குடி இருளர் சமூகப் பெண்கள் லட்சுமி, இராதிகா, வைகேஸ்வரி, கார்த்திகா ஆகியோர் புகார் அளித்திருந்தனர். அதில் காவலர்களின் துன்புறுத்தல், தாக்குதல், சித்திரவதை, சட்ட விரோதக் காவல், திருடியதாகப் பொய் வழக்கு என்பன பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.  இதன்மீது மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்து பாதிப்புற்ற 15  பேருக்கும் தலா ரூ.5 லட்சம் என ரூ. 75 இலட்சம் இழப்பீடு ஒரு மாதத்திற்குள் வழங்க  உத்தரவிட்டதோடு மட்டுமில்லாமல், பத்து ஆண்டுகளுக்கு மேல் காவல் துறையினர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு டிஜிபி-யை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்த சம்பவத்தின்போது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பளராக இருந்த திரு.பாஸ்கரன், இ.கா.ப அவர்கள் 1.12.2021 அன்று மாநில மனித  உயிமை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் எவ்விதத் தகவலும், உண்மையும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அளித்த பத்திரிகை செய்தியில் அப்படியொரு சம்பவம் நடவடிக்கையில்லை என மறுத்ததோடு மட்டுமில்லாமல் திருட்டு வழக்கிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் லெட்சுமி புகார் அளித்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.  பழங்குடியின மக்கள் மீதான காவல் வன்முறையை வெளிச்சமிட்டுக் காட்டிய  ஜெய்பீம் திரைப்படம் வெளியான பின்பும் இருளர், குறவர், கல் ஒட்டர், காட்டு நாயக்கர் மக்கள் மீதான காவல் வன்முறை வட மாவட்டங்களில் மட்டுமின்றி மத்திய, தென் மாவட்டங்களிலும் தொடர்வதை மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.  பழங்குடியின மக்களை பொய்யான திருட்டு வழக்கில் குற்றவாளியாக்குதல்,  வழக்கமாகக் குற்றச் செயல்புரிவோராகப் புனைதல் தாக்குதல் நடத்துதல் போன்ற  மீறல்களைச் செய்யும் காவல் அதிகாரிகள் இதுவரை தண்டனையில் இருந்து விலக்கு பெற்றது போல் உள்ளனர் என்பதற்கு மக்கள் கண்காணிப்பகத்தோடு இணைந்து பணியாற்றும் பேராசிரியர் கல்விமணி, திண்டிவனம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பைச் சேர்ந்த இரமேசுநாதன் போன்றோர் சான்றாக உள்ளனர்.  எனவே, பாதிப்புற்றோர்க்கு இழப்பீடு வழத்கியது மட்டும் போதாது. பாதிப்பை  ஏற்படுத்திய காவல் அதிகாரிகள் மீது பிரிவு 376 உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டம் பட்டியலினத்தோர்/பழங்குடியினர் மீதான வன்கொடுமை திருத்தச் சட்டம் 2016 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை மூன்று மாதத்திற்குள் அதாவது 31.03.2022க்குள் எடுக்கப்பட வேண்டும். காலதாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். இதுபோன்று தொடரும் காவல் வன்முறையை பொதுமக்கள் வெகுவாக கண்டிப்பதன் மூலமாக காவல் வன்முறை மேலும் தொடராமல் இருக்க தமிழகத்தின் அனைத்து ஐ.ஜிக்கள், சட்டம் ஒழுங்கு பிரிவின் ஏ.டி.ஜி.பிக்கள் ஆகியோருக்கு இந்த வழக்கு ஓர் எச்சரிக்கை மணியாக ஒலிக்க வேண்டும்.  முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை பத்தாண்டுகள் கழித்து முடித்துள்ள மாநில  மனித உயிமை ஆணையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக  உள்ளன. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. தொடர்ந்து பாதிப்புறும் இருளர், குரவர், கல் ஒட்டர், காட்டு நாயக்கர் போன்ற அடிநிலை மக்களுக்கு நீதி விரைந்து கிடைக்க வேண்டுமெனில், தற்போதுள்ள மாநில மனித உரிமை ஆணையம், மாநில பெண்கள் ஆணையம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில பட்டியல்/பழங்குடியினர் ஆணையம், மாற்றுத்திறனாளிகளுக்கான இயக்குநர், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குத் தேவையான பணியாளர்கள், நிதி, பயிற்சி வழங்கப்பட வேண்டும். பெயரளரில் செயல்படும் ஆணையங்கள் தேவையில்லை. ஐ.நா.வின் வழிகாட்டுதல்களையும், பாரிஸ் கோட்பாடுகளையும், பின்பற்றி செயல்படும் சுதந்திரமான, பொறுப்புள்ள திறன் மிகுந்த, வெளிப்படையான கட்டுப்பாடு மிகுந்த ஆணையங்களே இன்றைய தேவையாகும். ஹென்றி திபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

#SHRC, #Compensation, #Tribal, #StateHumanRightsCommission, #HenriTiphagne
22 Dec 2021 நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி 22.12.2021 People's Watch in Media Chennai

“நீதிபதிகள் நியமனமும் - சமூகநீதியும்“ நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் நடக்கிறது? வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? SathiyamTV சத்தியம் டி.வி. - சத்தியம் சாத்தியமே விவாத நிகழ்ச்சி 22.12.2021 Video Courtesy: SathiyamTV

#SathiyamTV, #Debate, #DebateShow, #SathiyamSathiyame, #JudgesAppointment
22 Dec 2021 HC dissatisfied with probe into custodial death case People's Watch in Media Madurai

Expressing dissatisfaction over the progress made in the investigation into the 2019 Avaniapuram custodial death case, the Madurai Bench of the Madras High Court on Tuesday observed that there was not only a delay but also lapses on the...

#TheHindu, #Avaniyapuram, #CustodialDeath, #HighCourt, ##HighCourtOrder, #MaduraiBench, #CustodialTorture, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan, #HenriTiphagne
22 Dec 2021 போ லீஸ் விசா ரணை யில் மதுரை இளை ஞர் மர்ம மரணம்: சிபிசிஐடி 31-ம் தே திக்குள் குற்றப்பத்திரி க்கை தா க்கல் செய்ய உத்தரவு People's Watch in Media Madurai

மதுரை : போ லீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரி க்கை தா க்கல் செ ய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுட் ள்ளது.   மதுரை மாவட்டம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகன். இவரைக் கடத்தல் வழக்கில் விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் அழைத்துச் சென்றனர். இதனிடையே, காவல் நிலையத்தில் இருந்து பாலமுருகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, விசாரணையின்போது போலீஸார் பாலமுருகனை அடித்துத்க் கொலை செய்ததாகவும், மறுபிரேதப் பரிசோதனை நடத்தவும், இழப்பீடு வழங்கக் கோரியும் பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். பின்னர் சில நாட்கட்ளிலேயே திடீரெ ன தனது மனுவை முத்துக்கருப்பன் திரும்பப் பெற்றுள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி டிபேன், உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், போலீஸாரி ன் அச்சுறுத்தல் காரணமாக முத்துக்கருப்பன் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார் என்றும், முத்துக்கருப்பனை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த மனு குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. மேலும் பாலமுருகன் மரணம் தொ டர்பான வழக்கை சிபிசிஐடி விசா ரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், இளைஞர் பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி , நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய நீதிபதிகள், போலீஸாருக்கு போலீஸார் உதவி செய்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், டிசம்பர் 31- ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துத் உத்தரவிட்டனர்.

#CustodialTorture, #PoliceTorture, ##CustodialDeath, ##BalamuruganCustodialDeath, #Avaniyapuram, #AvaniyapuramBalamurugan, #HighCourtOrder, #HighCourt, #MaduraiBench
20 Dec 2021 Repatriation Of Dead Bodies: Draft Guidelines Submitted Before Madras High Court In Pudukkottai Fisherman's Case People's Watch in Media New Delhi

Repatriation Of Dead Bodies: Draft Guidelines Submitted Before Madras High Court In Pudukkottai Fisherman's Case The draft guidelines for repatriation of dead bodies have been prepared by Advocate Henri Tiphagne, counsel for the petitioner wife in the case...

#LiveLaw, #SriLankan, #Fisherman, #HighCourt, #HighCourtOrder, #MaduraiHighCourt
19 Dec 2021 Two Years Since Killing of Anti-CAA Protesters in UP, NHRC Conducts Spot Inquiry People's Watch in Media New Delhi

On December 19, 2019, 22 Muslims died in police firing, hundreds of dissenters were injured and property owned by Muslims was vandalised by the police. Two years after the Uttar Pradesh police allegedly killed 22 Muslims, caused grievous...

#TheWire, #NHRC, #AntiCAA, #UP
15 Dec 2021 Failure to curb sandalwood mafia led to death of tribal workers in Andhra: People's Watch People's Watch in Media Salem

A Madurai-based NGO’s fact-finding team on a recent incident involving the death of two Tamil Nadu labourers, who allegedly died after being taken in custody by the Andhra Pradesh forest officials, has said that, belonging to the scheduled tribal...

#CounterView, #RedSandal, #HenriTiphagne, #FactFinding, #APForest, #AP, #Labourers, #LabourersKilled, #Torture
15 Dec 2021 முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தற்கொலையா? விஷம் குடித்து இறந்தார் என்ற போலீஸாரின் விளக்கம் சந்தேகத்திற்குரியதா? People's Watch in Media Madurai

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தற்கொலையா? விஷம் குடித்து இறந்தார் என்ற போலீஸாரின் விளக்கம் சந்தேகத்திற்குரியதா? |Sathiyam Sathiyame|15-12-2021| சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சி  To watch video: https://youtu.be/mZqOo69w2TM

#Manikandan, #SathiyamTV, #CustodialDeath, #Muthukulathur, #PoliceTorture, #Ramanathapuram, #CustodialTorture
14 Dec 2021 ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? வழக்கறிஞர் ஹென்றி திபேன் #Redpix People's Watch in Media Chennai

ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? போஸ்ட்மார்ட்டத்தில் தில்லுமுல்லு - வழக்கறிஞர் ஹென்றி திபேன் பரபரப்பு பேட்டி Redpix யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி Video Courtesy: #Redpix To watch full video: https://youtu.be/YFHkRD6wGe0...

#Ramanathapuram, #CustodialDeath, #Redpix, #CustodialTorture, #PoliceTorture, #Manikandan, #YouTube, #HenriTiphagne


Join us for our cause