for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

போதைப் பழக்கங்களால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அத்துமீறி நடந்துகொள்வது, சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது என சட்ட, ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், காவல் நிலையங்களில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

...................................

மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் பேசுகையில், `சிறுவர்கள் சினிமாவில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகளைப் பார்த்து தடம்மாறுகிறார்கள். என்னிடம் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அழைத்து வந்தார்கள். பட்டாக்கத்தி ஒன்றை அவன் வைத்திருந்தானாம். போதைக்கு அடிமையானவன். நான் அந்த மாணவனின் பெற்றோரிடம் பேசினேன். பள்ளி ஆசிரியர்களிடமும் பேசினேன். பிறகு, அந்த மாணவனிடம் பேசியபோது, `தவறான சகவாசத்தால் இப்படி ஆகிவிட்டேன். திருந்திவிடுகிறேன்’ என்று அழுதான். அவனைச் சட்டப்படி பார்த்தால், போலீஸில் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அப்படிச் செய்திருந்தால் அவன் பயங்கர கிரிமினலாக மாறிவிட வாய்ப்பு உண்டு. அதை யோசித்த நான் கவுன்சலிங் செய்து அனுப்பினேன். பள்ளித் தரப்பில் ஒரு வாரம் சஸ்பெண்ட் மட்டும் செய்தார்கள். வீட்டில் நல்ல அரவணைப்பையும் கண்காணிப்பையும் தரச் சொன்னேன். இப்போது அவன் மனம் திருந்தி நல்லபடியாக நடந்துவருகிறான். குற்றச் சம்பவங்களில் தெரியாமல் நுழையும் மாணவர்கள், இளைஞர்களைச் சட்டப்படி தண்டிக்காமல் கவுன்சலிங் செய்தால் நிச்சயம் அவர்கள் திருந்துவார்கள். இந்த மாதிரிச் சிறுவர்களுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கும் ரௌடி கும்பல் வெளியே நடமாடுகிறது. அவர்களுக்கு அரசியல் தொடர்பு இருக்கிறது. அந்த மாதிரி ஆட்களை எந்த அரசியல் கட்சியும் வளர்த்துவிடக் கூடாது. நமது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவங்கள் குறையும்'' என்றார்.

................................................................................

Full Media Report



Join us for our cause