for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் திரு. ஜான் வின்சென்ட் அவர்களின் கண்டன உரை 




தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கியூ பிரிவு போலீஸாரின் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா சட்டத்தை நீக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை வகித்தார்

தலைமைக் குழு உறுப்பினர் மு.தமிழ்ப்பித்தன், மாவட்ட தலைவர் மா.மாயாண்டி, மாவட்ட செயலாளர் பி.விடுதலை சேகர், மாவட்ட அமைப்பாளர் ச.கிட்டு ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வாஞ்சிநாதன் உட்பட்ட பல்வேறு அமைப்பினர் பேசினர்.

Full Media Report


மதுரையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

கியூ பிரிவு போலீஸார் அத்துமீறலை கண்டித்தும், மக்கள் விரோத உபா (UAPA) சட்டத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த ஹென்றி திபேன், மீ. தா. பாண்டியன், கனியமுதன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Full Media Report


 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 25.11 அன்று தோழர் தமிழ்பித்தன் வீட்டில் கியூ பிரிவு ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் தமிழ்பித்தன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடைபெற்றதாகவும், மேலும் புத்தகங்கள் இதழ்கள் துண்டறிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஜனநாயக விரோதமாக எடுத்து சென்றுள்ளனர்.

Full Media Report


முகவை மாவட்டம் முதுகுளத்தூர் மணிகண்டன் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மதுரையில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு. ஹென்றி திபேன் கண்டன உரையாற்றினார். 

 


சுற்றுச்சூழலியல் ஆர்வலர் முகிலன், சென்ற வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 13 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றது சம்பந்தமான ஆவன படமொன்றை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிப்ரவரி 15ந் தேதி வெளியிட்டார்.   அன்று இரவிலிருந்து அவர் காணாமல் போனார்.

Full Media Report



Join us for our cause